இனவழிப்புக்கு காரணமான படை அதிகாரிகளை தொடர்ந்தும் தூக்கிப் பிடிக்கும் சிறிலங்கா

தமிழின அழிப்புக்கு,போர்க்குற்றங்களுக்கு காரணமான படைத்துறையினருக்கு சிறிலங்கா அரசு உயர்பதவிகளையும் பட்டங்களையும் வழங்கிவருவது, சிங்கள அரசுகள் அனைத்துலக மனிதவுரிமை,மற்றும் பொறுப்புக்கூறல் போன்ற
விடையங்களை தொடர்ந்தும் புறந்தள்ளி செயற்பட்டு வருவதையே காட்டிநிற்கிறது.

இந்தவகையில்

தமிழின அழிப்பு இடம்பெற்றபோது பணியில் இருந்த முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு “அட்மிரல் ஒப் த பிலீட்” எனும் கௌரவ பட்டமும், முன்னாள் விமானப்படைத் தளபதி ரொஷான் குணதிலக்கவிற்கு “மார்ஷல் ஒப் த ஸ்ரீ லங்கா எயார்போஸ்” எனும் கௌரவ பட்டமும் சிறிலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதற்கான நிகழ்வு நேற்று (19) கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு இறங்குதுறையில் இடம்பெற்றது.

சிறிலங்கா அரச அதிபர் மைத்ரிபால சிறிசேன வெளியிட்ட விசேட வர்த்தமானி அறிக்கையின் ஊடாக முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட “அட்மிரல் ஒப் த பிலீட்” ஆகவும் முன்னாள் விமானப்படைத் தளபதி ரொஷான் குணதிலக்க “மார்ஷல் ஒப் த ஸ்ரீ லங்கா எயார்போஸ்” ஆகவும் பதவியுயர்வு பெற்றுள்ளனர்.

அப்பாவி தமிழ் மக்கள் மீது வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட மேற்கொள்ளப்பட்ட கொடூர வான்தாக்குதல்களுக்கும், கடல்சார் படுகொலைகளுக்கும் பொறுப்புக்கூற வேண்டிய இரு நபர்கள் இவ்வாறு சிங்கள அரசால் மதிப்பளிக்கப்படுவது, சிறிலங்கா அரசாங்கம் அனைத்துலக மனிதவுரிமைகள் அமைப்புகளை செல்லாக்காசாக கருதி செயற்படும் போக்கையே வெளிப்படுத்திநிற்கிறது