வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் முயற்சி

374 Views

வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் மீது இளைஞர் குழு  மேற்கொண்ட தாக்குதல் முயற்சியில் அவரின் வாகனம் சேதமாகியுள்ளது. இச்சம்பவம் இன்று இரவு 7.00 மணியளவில்  இடம்பெற்றது.

மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் வாகனத்தில்  சென்றுள்ளார். இதன் போது கற்பகபுரம் 4ம் கட்டை பகுதியில் இளைஞர் குழுவோன்று அவரின் வாகனத்தினை வழிமறித்துள்ளனர்.

அதனையடுத்து வாகனத்திலிருந்து வினோநோகராதலிங்கம் கீழே இறங்கி அவ் இளைஞர்களுடன் கலந்துரையாட முற்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. அச் சமயத்தில் அவர் மீது தாக்குதல் நடத்த அந்த இளைஞர் குழு முயன்றுள்ளது.

இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோக பாதுகாப்பு உத்தியோகத்தர் மேல் நோக்கி துப்பாக்கி சூடுநடத்தியமையினையடுத்து அவ் இளைஞர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply