வட மாகாணத்தின் அபிவிருத்தி -ஆளுநர் ஜப்பான் தூதரகம் இணைந்து கலந்துரையாடல்

வட மாகாணத்தில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் பாங்கெடுப்புகள் தொடர்பில் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் ஹிடோக்கி மிசுகோஷி இணைந்து கொழும்பில் நேற்று (28)  கலந்துரையாடலை ஏற்பாடு செய்தனர்.

குறித்த கலந்துரையாடலில் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் ஹிடேக்கி மிசுகோஷி, மாற்றுக் கொள்கைக்கான மையம் (CPA ) – கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, பிரதமரின் செயலாளர்  அனுர திஸாநாயக்க இந்தியாவில் உள்ள இலங்கை தூதுவர் மிலிந்த மொரகொட,வடக்கு ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் தன்யா ரத்னாவல், கொரிய தூதுவர்  சந்துஷ் ஜியோங் வூன்ஜின் தாய்லாந்து தூதுவர் ஹெச், வியட்நாம் தூதுவர் போஜ் ஹர்ன்போல் , திருமதி ஹோ திதான் ட்ரூக் (தூதர்) மலேசியா, இந்தோனேசியா  தூதர் எச்.இ. டெவி குஸ்டினா டோபிங்  ,யாழ் இந்தியத் துனைத்தூதர்   ராகேஷ் நடராஜ் , இலங்கைக்கான துருக்கி தூதரக அதிகாரி பிலால் சக்லாம் (மூன்றாவது செயலாளர்) ,சர்வதேச அமைப்புகள் WFP –  அப்துர் ரஹீம் சித்திக் ( நாட்டு இயக்குநர் ) UNDP – திரு. ராபர்ட் ஐங்கர், அருண நாணயக்கார (அலகு தலைமை போர்ட்ஃபோலியோ நிர்வாகம்) WB – அசேல திஸாநாயக்க (சிரேஷ்ட நடவடிக்கை அதிகாரி),  ஹூசம் அபுதாகா (ஆலோசகர்) JICA –  டெட்சுயா யமடா (தலைமைப் பிரதிநிதி) ,  டகாஃபுமி சகுரசாகாத ஆகியோர் கலந்து கொண்டனர்.

குறித்த கலந்துரையாடலில் வட மாகாணத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தூதரக அதிகாரிகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பணிப்பாளர்களுக்கு விளக்கமளித்தார்.

கலந்துரையாடலில் பங்கு கொண்ட தூதரக அதிகாரிகள் மற்றும் அரசு சார்பற்ற நிறுவனத்தின் பணிப்பாளர்கள்  வடமாகாணத்தில்  மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி திட்டங்களுக்கு காத்திரமான பங்கை வகிப்பதுடன் விரைவில் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளதாக தெரிவித்தனர்.