வட்டி மாபியாக்களினால் பறிபோன வர்த்தகரின் உயிர்!

256 Views

மட்டக்களப்பு செங்கலடி நகரில் உள்ள பிரபல வர்த்தகரான ராஜன் என்பவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

செங்கலடி சக்தி ஸ்டோர்ஸ் முதலாலியான இவர் கடந்த 1990 ஆண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து செங்கலடி பிரதேசத்திற்கு வருகை தந்து பல சிறிய சில்லறை கடை வர்த்தகர்களை உருவாக்கி உதவி செய்தவரின் தற்கொலை செங்கலடி பிரதேசத்தில் உள்ள வர்த்தகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மிகுந்த கடன் காரணமாக தன்னிடம் இருந்த மூன்று கடைகள் மற்றும் வீடு என்பவற்றை விற்பனை செய்த அவர் தான் விற்பனை செய்த வீட்டில் இருந்து இரவு முழுவதும் பொருட்களை ஏற்றியவர் இரவு வீடு செல்லாது இருந்துள்ளார்.

இன்நிலையில் காலை வீட்டின் பின்புறம் வேலைக்கு சென்றவர்கள் கதவை திறந்த போது கடையின் பின்புற அரையிறுதியில் தூக்கில் தொங்கி நிலையில் அவரது சடலத்தை கண்டு ஏறாவூர் பொலீசாருக்கு அறிவித்துள்ளனர்.

வட்டி மாபியாக்களினால் கடனுக்கு மேல் கடன் சுமையில் வீழ்த்தப்பட்ட இவருக்கு சுமார் ஐந்து கோடிக்கு மேல் இருந்த கடனை அடைப்பதற்காக தான் 30 வருடங்களாக சேர்ந்த சொத்து கடைகள் வீடு என்பவற்றை விற்பனை செய்துள்ளார்.

இதன் தாக்கமே அவரை தற்கொலைக்கு தூண்டி உள்ளதாக கூறப்படுகிறது.

செங்கலடி பிரதேசத்தில் உள்ள வர்த்தகர்கள் மத்தியில் காணப்படும் வட்டிக்கு பணம் வேண்டுதல் அதனை அடைப்பதற்கு  வங்கியில் சொத்துக்களை வைத்து கடன் பெறுதல் என கடனுக்கு கடன் வாங்கியே பல வர்த்தகர்கள் செங்கலடி பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்று விட்டனர்.

வட்டி மாபியாக்கள் மிகவும் திட்டமிட்டு வட்டிக்கு பணம் கொடுத்து இவ்வாறு பல வர்த்தகர்களை இல்லாமல் செய்துள்ளனர்.

வட்டிக்கு பணம் வாங்கிய பல வர்த்தகர்கள் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

பல வர்த்தகர்கள் நாட்டை விட்டு தப்பிச் சென்று விட்டனர். எனவே வர்த்தகர்கள் இனியாவது இந்த வட்டி மாபியாக்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

செங்கலடி சக்தி ஸ்டோர் முதலாளி  மரணம் நடந்து என்ன?

rajan வட்டி மாபியாக்களினால் பறிபோன வர்த்தகரின் உயிர்!வங்கிகளில் வட்டிக்குப் பெறப்பட்ட பணத்தை விட பலமடங்கு வட்டியுடன் பணத்தை உடனடியாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட, தனது குடியிருந்த வீட்டையும், கடைத்தொகுதியையும் விற்று தனியார் வங்கியொன்றுக்கு பணத்தை செலுத்தியிருக்கிறார்.

75 லட்சம் ரூபா வங்கியிலிருந்து பெறப்பட்ட பணத்துக்கு, 03 கோடியே 20 லெட்சம் ரூபா தனது சொத்துக்களை விற்று செலுத்தியிருக்கிறார்.

இந்த நிலையில் மற்றுமொரு நிறுவனத்தில் வட்டிக்கு பெறப்பட்ட 75 லட்சத்துக்கும் மாதாந்தம் கட்டி வந்த தொகையைவிட இருமடங்கு கட்டிவரவேண்டுமென்று அவர்கள் வற்புறுத்தியதால், மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாத நிலையில், ஏற்கனவே விற்கப்பட்ட கடைத்தொகுதியின் பின்புறமாகவுள்ள ஸ்டோர் அறையின் வளையில் கயிற்றினால் கழுத்தில் சுருக்கிட்டு தொங்கி (27/08) மரணித்துள்ளார்..

விற்கப்பட்ட கடையை, வாங்கிய முதலாளி ஓடாவி மேசன்மார்களை வைத்து திருத்த வேலைகளை செய்துவருவதால், இன்று காலை திருத்த வேலைகளுக்காக வந்த ஒடாவி ஒருத்தரே ஸ்டோர் அறைக்கு சென்றபோது, .இவர் தூக்கிட்டிருப்பதை அடையாளம்கண்டு, அவரது மனைவிக்கு தெரியப்படுத்தியிருக்கிறார்.

பின்னர் ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு, கௌரவ நீதிபதியின் உத்தரவுக்கமைய, பிரதேச மரண விசாரனை அதிகாரி MSM நஸீர், தடயவியல் பொலிசாரின் வருகையோடு சம்பவ இடத்துக்கு சென்று விசாரனைகளை மேற்கொண்டு, பிரேத பரிசோதனைக்காக சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனர்.

 

Leave a Reply