வடமாகாணத்துக்கு மேலதிகமாக 2,000 பொலிஸார் நியமனம்! 400 பேர் பெண்கள்

வடக்கு மாகாணத்துக்கு மேலதிகமாக 2000 பொலிஸாரை நியமிக்க பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷஷவின் ஆலோசனைக்கு அமையவே இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அதன்படி, வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 200 உதவி பொலிஸ் ஆய்வாளர்கள், 400 பெண்கள் உட்பட 1800 பொலிஸ் உதவியாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

இந்த நியமனங்கள் அந்தப் பகுதியில் சட்டம் மற்றும் ஒழுங்கை அமுல்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ளன என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்தோடு, இந்த புதிய அதிகாரிகள் வடக்கு மாகாணத்தில் உள்ள பயிற்சி மையங்களில் பயிற்சியளிக்கப்பட்டு, பின்னர் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளனரெனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் கூறியுள்ளது.

Leave a Reply