வடக்கு ஆளுநராக திருமதி சாள்ஸ் நியனம்

வடமாகாணசபை ஆளுநராக முன்னாள் சுங்கத் திணைக்களப் பணிப்பாளரும், சுகாதார அமைச்சின் செயலாளருமான திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் இன்று(19) நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை அமைச்சரவை வழங்கியுள்ளது.

நேற்றைய தினம் ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸ தலைமையில் கூடிய அமைச்சரவையில், வடக்கு ஆளுநராக இலங்கை நிர்வாக சேவை அலுவலர் ஒருவரை நியமிப்பதற்கான தீர்மானம் முன்வைக்கப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதன் மூலம் வடக்கு மாகாண ஆளுநராக பி.எம்.எஸ். சார்ள்ஸ் நியமிக்கப்படுவதுடன், அவர் இலங்கை நிர்வாக சேவை அதிகாரி பதவியை தொடர்ந்தும் வகிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply