வடக்கில் இராணுவ நடவடிக்கையால் இடம்பெயர்ந்த மக்கள்! அத்துமீறி அபகரிக்கப்படும் காணிகள்

வவுனியா வெங்கலச்செட்டிகுளம் பிரதேச பிரிவிலுள்ள மன்னார் வீதி, கண்ணாட்டி கணேசபுரத்தில் ஒரு பகுதியான கண்ணாட்டி – தம்பனை வீதியிலிருந்த 170 குடும்பங்கள் கடந்த 1990 ஆம் ஆண்டு மன்னார் பிரதான வீதியை கைப்பற்றும் எடிபல இராணுவ நடவடிக்கை யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மடுவில் தங்கியிருந்து பின்னர் அங்கிருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து சென்றிருந்தனர்.

அவ்வாறு இடம்பெயர்ந்து சென்ற 170 குடும்பங்களின் 400 ஏக்கருக்கு அதிகமான காணிகள் தற்போது அத்து மீறி அபகரிக்கப்பட்டு வருவதுடன் அங்கு அரசியல் வாதிகள் மற்றும் அதிகாரிகளின் துணையுடன் கிரவல் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அக்காணியின் உரிமையாளர் ஒருவர் தனது காணியை மீட்டுக்கொள்வதற்கு பல்வேறு நடவடிக்கைகளையும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். 1977ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட இனக்கலவரத்தில் கண்டி, மாத்தளை பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து சென்ற மக்கள் இப்பகுதியில் குடியேற்றப்பட்டிருந்தனர்.

பின்னர் வடகிழக்கில் 30வருடங்களுக்கு முன்னர் யுத்தம் காரணமாக இலட்சக்கணக்கான மக்கள் இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து சென்று அகதி முகாம்களில் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் மன்னார், செட்டிகுளம் பகுதிகளைச் சேர்ந்தவர்களே அதிகளவில் முகாம்களில் வசித்து வருகின்றனர்.
625.0.560.350.390.830.053.800.670.160.91 9 1 வடக்கில் இராணுவ நடவடிக்கையால் இடம்பெயர்ந்த மக்கள்! அத்துமீறி அபகரிக்கப்படும் காணிகள்
அந்தவகையில் கண்ணாட்டி கணேசபுரம் கிராமப்பகுதியிலுள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்து சென்றிருந்தனர். இதில் கண்ணாட்டி தம்பனை வீதியில் மட்டும் 170 குடும்பங்களின் காணிகளை அபகரிக்கும் நோக்குடன் அரச அதிகாரிகள் உரிமைகள் கோரப்படாத காணிகள் என்ற போர்வையில் அக்காணிகளின் அனுமதிப்பத்திரங்கள், தரவுகள் பிரதேச செயலகத்தின் ஆவணக்காப்பகத்தில் உள்ளபோதும் முறைகேடான விதத்தில் கையகப்படுத்தி புதியவர்களுக்கு ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
625.0.560.350.390.830.053.800.670.160.91 7 1 வடக்கில் இராணுவ நடவடிக்கையால் இடம்பெயர்ந்த மக்கள்! அத்துமீறி அபகரிக்கப்படும் காணிகள்

gf வடக்கில் இராணுவ நடவடிக்கையால் இடம்பெயர்ந்த மக்கள்! அத்துமீறி அபகரிக்கப்படும் காணிகள்

இதையடுத்து அப்பகுதியில் ஆவணங்களைப் பெற்றுக்கொண்டவர்கள் அங்கு சென்று இயந்திரத்தின் உதவியுடன் காணிகளை சுத்தப்படுத்தி அபகரிப்பு செய்து வருவதுடன் தினமும் 100ற்கும் மேற்பட்ட டிப்பர்கள் மூலம் அங்குள்ள கிரவல்களை அகழ்ந்து வெளியிடங்களுக்கு எடுத்துச் செல்கின்றனர்.

1990ஆம் ஆண்டு இரண்டரை ஏக்கருக்கு மேல் நிலப்பரப்பில் வசித்து வந்த அப்பகுதி மக்கள் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து இந்தியாவிற்கு சென்றவர்கள் தற்போது 30வருடங்களின் பின்னர் தாயகம் திரும்பவுள்ள நிலையில் அவர்களின் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளதால் நிர்கதியான நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.

கிராம அபிவிருத்திச்சங்கம், கிராம அலுவலரின் அனுமதியுடன் இடம்பெற்று வரும் இந்நடவடிக்கைளை தடுத்து நிறுத்துமாறு பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் கிராம அலுவலகர், மாவட்ட செயலகத்திற்கு முறைப்பாட்டினை வழங்கியிருகின்றார்.

இதேவேளை குறித்த வீதியால் தினமும் டிப்பர்களில் எடுத்துச் செல்லப்படும் கிரவல்களினால் அங்கு தற்போது வசித்து வரும் மக்களின் வீடுகள், வீதியால் பாடசாலை செல்லும் மாணவர்களின் சீருடைகள் உட்பட வீதிகள், வீதி ஓரங்கள் பழுதடைந்து வருவதாகவும் இந்நடவடிக்கையினை தடுத்து நிறுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கையினை உடன் மேற்கொள்ளுமாறும் பிரதேச மக்கள் கோரி வருகின்றனர்.

இவ்விடயம் குறித்து வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலாளர் க.சிவகரனிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, இந்தியாவிற்கு சென்றவர்கள் திரும்பி வந்து தமது காணிகளை உறுதிப்படுத்தும் ஆவணங்களை காண்பித்தால் அவர்களின் காணிகள் அவர்களுக்கு திரும்ப வழங்கப்படும் உரிமை கோரப்படாத காணிகளில் கிரவல் அகழ்வுப்பணிகள் தற்சமயம் இடம்பெற்று வருகின்றன. 3 மீற்றருக்கு மேல் காணப்படும் கிரவல்கள் அகழப்பட்டு வருவதுடன் காணியில் சேதம் ஏற்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இக்கிரவல்கள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் வேண்டு கோளினடிப்படையில் அதிவேக பிரதான வீதிகள், வவுனியாவிலுள்ள வீதிப்புனரமைப்புப் பணிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. அப்பகுதியில் காணி உள்ளவர்கள் இந்தியாவிலிருந்து நாடு திரும்பியவர்கள் தமது ஆவணங்களை கிராம அலுவலகர் ஊடாக உறுதிப்படுத்தினால் அவர்களின் காணிகள் அவர்களுக்கு திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply