வங்கதேசம் சென்ற பிரதமர் மோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு

கொரோனா வைரஸ் பாதிப்புக்குப் பின் எந்த வெளிநாட்டுக்கும் பயணிக்காத இந்தியப் பிரதமர் மோடி, 15 மாதங்களுக்குப் பின் இன்று வங்கதேசத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

 வங்கதேசம் நாடு கடந்த 1971-ம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டது ஆகும். இந்த பிரிவினையை இந்தியா முன் நின்று நடத்தியது. இதன் காரணமாக இந்தியா- வங்கதேசம் இடையே நல்ல நட்புறவு நீடித்து வருகிறது.

வங்கதேசம் சுதந்திரம் பெற்று இந்த ஆண்டு பொன்விழா கொண்டாடுகிறது. அதை தேசிய தினமாக வங்கதேசம் கொண்டாடுகிறது. இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்தார்.

அதன்படி, இன்று (வெள்ளிக்கிழமை) காலை அவர் வங்கதேசத்துக்கு புறபட்டுச் சென்றார் பிரதமர் மோடி. வங்கதேச தலைநகர் டாக்காவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. பிரதமர் ஷேக் ஹசீனா விமான நிலையத்திற்கு சென்று பிரதமர் மோடியை வரவேற்றார். பின்னர் அங்கு வீரர்களின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

இன்றும், நாளையும் 2 நாட்கள் வங்கதேசத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

வங்கதேச ஜனாதிபதி அப்துல் ஹமீது, பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோரையும் பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார். அப்போது இந்தியா- வங்கதேசம் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது  என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில்,இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோடி வருகையையொட்டி அவர் செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பு ஏற்பாடுகளை வங்கதேச அரசு செய்துள்ளது.

May be an image of 16 people, people standing and indoor

மேலும் வங்கதேச இளம் சாதனையாளர்களை பிரதமர் மோடி சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.