லண்டனில் கத்திக்குத்துக்கு உள்ளானவர்களில் இருவர் சாவு

லண்டன் பாலத்தில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் பொதுமக்கள் இருவர் இறந்துள்ளனர், மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர் என்று பெருநகர காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
‘பயங்கரவாதத் தாக்குதல்’ என தெரிவிக்கப்பட்டுள்ள இந்த தாக்குதலை நடத்திய நபரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். குறித்த நபர் ஒரு போலியான வெடிக்கும் கருவியையும் அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது.