றுவாண்டாவில் இனஅழிப்பில் ஈடுபட்ட அரசியல்வாதிக்கு ஆயுள்தண்டனை

540 Views

றுவாண்டாவில் 1994 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இனஅழிப்பில் 25,000 இற்கு மேற்பட்ட மக்களை படுகொலை செய்வதற்கு கட்டளையிட்ட முன்னாள் அரசியல்வாதியான லடிஸ்லாஸ் நகன்ஸ்வாவுக்கு றுவண்டா நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்துள்ளது.

றுவாண்டாவின் தென் பகுதி நகரான நாகிசூ நகரத்தின் முன்னாள் நகரசபைத் தலைவரான நகன்ஸ்வாவுகடகு எதிராக 1996 ஆம் ஆண்டு தன்சானியாவை தளமாகக் கொண்ட அனைத்துலக நீதிமன்றத்தில் விசாரணைகள் இடம்பெற்றது.

றுவண்டாவில் இடம்பெற்ற ருற்சி இன மக்களுக்கு எதிரான இனஅழிப்பு, படுகொலைகள் மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான குற்றங்கள் இவர் மீது சுமத்தப்பட்டிருந்தது.

இந்த விசாரணைகளின் முடிவில் அவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டதாக நீதிமன்ற பேச்சாளர் ஹரிசன் முட்டாபசி கடந்த வியாழக்கிழமை (28) தெரிவித்திருந்தார்.

Leave a Reply