ரைட்டானிக் பட கதாநாயகனே அமேசான் காட்டுக்கு தீ வைத்தார் – பிரேசில் அதிபர்

அமேசான் காட்டுக்கு தீ வைக்க ஹாலிவுட் நடிகர் லியனார்டோ டி காப்ரியோதான் பணம் கொடுத்தார் என பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூ குற்றஞ்சாட்டி உள்ளார். ஆனால், இதுகுறித்து அவர் எந்த ஆதாரத்தையும் அளிக்கவில்லை. இதற்கு முன்பு, அமேசான் காட்டுத்தீக்கு அரசுசாரா அமைப்புகள்தான் காரணம் என பொல்சனாரூ குற்றஞ்சாட்டி இருந்தார்.

அமேசான் காடுகளைக் காக்க 5 மில்லியன் டாலர்கள் தருவதாக உறுதி அளித்திருந்த காப்ரியோ இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.