ரெலோ பிரதிநிதிகள், பிரித்தானியாவின் இலங்கைக்கான தூதுவர் சாரா ஹல்டன் அவர்களுடன் சந்திப்பு

ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ரெலோ செயலாளர் ஜனா(கருணாகரம்) மற்றும் ரெலோ ஊடக பேச்சாளர் சுரேந்திரன் ஆகியோருக்கும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு ஒன்று இன்று (06) இலங்கையில் உள்ள பிரித்தானிய தூதரகத்தில் நடைபெற்றது.

மிக அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது எனக் கருதப்படும் இச்சந்திப்பு இரண்டு மணிநேரம் நடைபெற்றது.

இச்சந்திப்பில், ஐ.நா மனித உரிமை பேரவை தீர்மானம், அரசியல் தீர்வு, மாகாணசபை தேர்தல்கள், வடகிழக்கின்  பொருளாதாரத்தை மேம்படுத்தல், நில அபகரிப்பு, இளையோர் மற்றும் பெண்கள் பங்களிப்பு, அபிவிருத்தி ஆகிய பல்வேறு விடயங்கள் சம்பந்தமான பேச்சுக்கள் நடைபெற்றன.

Leave a Reply