ரிஷாத்தின் உரிமை மீறல் வழக்கு – மூன்றாவது நீதியரசரும் விலகல்

155 Views

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மீறல் வழக்கு விசாரணையில் இருந்து மூன்றாவது நீதியரசரும் விலகிக் கொண்டுள்ளார்.

உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ், தனது தனிப்பட்ட காரணங்களுக்காக வழக்கு விசாரணையில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மீறல் வழக்கு நேற்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, நீதியரசர் நவாஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்ட மூவர் கொண்ட நீதியரசர் குழாமில் இருவர் ஏற்கனவே விலகிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து குறித்த அடிப்படை உரிமை மீறல் வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 5 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply