வெள்ளை வான், வெறும் கதையா?

முதன்முறையாக ராஜபக்ச ஆட்சி காலத்தில் ஆட்கடத்தலில் ஈடுபட்ட இலக்க தகடற்ற வெள்ளைவான் ஒன்றை படங்களுடன் அம்பலப்படுத்தி இருந்தார் “Colombo Telegraph”என்கிற பத்திரிகையின் பிரதம ஆசிரியர் உவிண்டு குருகுலசூரிய.

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பகுதியில் அமைந்திருந்த தமிழ் ஆயுத ஒட்டுக்குழு அலுவலக வாசலில் இந்த வெள்ளைவான் படமாக்கப்பட்டு இருந்தது. பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொல்லப்பட்ட சில வாரங்களில் இலங்கையை விட்டு தப்பி சென்ற குருகுலசூரிய தற்போது London School Of Economics and Political Science பல்கலை கழகத்தில் Visiting Fellow ஆக கடமையாற்றுகிறார்.Uvinduk VR வெள்ளை வான், வெறும் கதையா?

அதே போல யாழ்ப்பாணத்தில் கடத்தல்களில் ஈடுபட்ட வெள்ளைவான்களின் இலக்கத்தகடுகளும் பல்வேறு சந்தர்ப்பங்களில் அம்பலப்படுத்த பட்டு இருந்தன. குறிப்பாக 2007.05.12ம் திகதி பிரதேச செயலகத்திற்கு தந்தையுடன் கடவுச்சீட்டு எடுப்பதற்காக சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த ஒருஇளைஞர் 252-3286 என்ற இலக்கம் பொறிக்கப்பட்ட வெள்ளை வாகனத்தில் வந்த படை யினரும், ஈ.பி.டி.பியினரும் வட்டுக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு முன்பாக வைத்து எனது மகனை பிடித்துச் சென்றார்கள் என இராசேந்திரம் துளசிமலர் என்ற சங்கானையை சேர்ந்த தாய் காணாமல்போனவர்களை கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்து இருந்தார்

தென்னிலங்கையில் சிங்கள பத்திரிகையாளர் போத்தல ஜயந்த அவர்கள் GC-0306 and 2532008 என்கிற இலக்க தகடு பொருத்தப்பட்ட வெள்ளைவான்களில் கடத்தப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டு இருந்தார்

அண்மையில் கொழும்பில் கடத்தபட்ட 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கில் சாட்சியம் வழங்கிய லெப். கொமாண்டர் கே.சி.வெலகெதர என்கிற அதிகாரி கடத்தல்களில் பயன்படுத்தப்பட்ட வெள்ளைவான் தொடர்பான தெளிவான சாட்சியங்களை வழங்கி இருந்தார் .இந்த விடயங்களை வெளி கொண்டு வந்திருந்த விசாரணையாளர் நிஷாந்த டீ சில்வா என்கிற அதிகாரி ஆட்சி மாற்றத்தின் பின் சுவிஸ் நாட்டிற்கு தப்பி சென்று இருக்கிறார்hha வெள்ளை வான், வெறும் கதையா?

ஆகவே வெள்ளைவான் விவகாரம் வெறுமனே முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்தின சம்பந்தப்பட்டதல்ல. அதே போல வெறும் தேர்தல் கால குற்றச்சாட்டும் அல்ல . இந்த கொடூரமான வெள்ளைவான் கடத்தல் சம்பவங்களால் பாதிக்கப்பட்டு அல்லல்படும் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் போதிய தெளிவான சான்றுகளுடன் நீதி வேண்டி இன்றைக்கும் வீதியில் இருக்கிறார்கள்