ரஸ்யாவிடம் உதவி கோருகின்றது சிறீலங்கா

535 Views

நாளை (22) ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இடம்பெறும் பிரித்தானியாவின் தீர்மானம் மீதான வாக்களிப்பை தோற்கடிப்பதற்கு ரஸ்யாவின் உதவியை சிறீலங்கா நாடியுள்ளது.

கடந்த புதன்கிழமை (17) கொழும்பில் உள்ள ரஸ்யா தூதரகத்திற்கு சென்ற சிறீலங்காவின் வெளிவிவகாரச் செயலாளர் ஜெயநாத் கொலம்பகே ரஸ்யா தூதுவர் யூரி மரெறியேயை சந்தித்து இந்த உதவியை கோரியுள்ளார். கொலம்பகேயுடன் மேலும் ஒரு சிறீலங்கா வெளிவிவகார அதிகாரியும் சென்றிருந்தார்.

முன்னர் ரஸ்யாவில் இருந்து பிரிந்து சென்ற நாடுகளின் ஆதரவுகளை தமக்கு திரட்டித் தருமாறு சிறீலங்கா தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள இராஜதந்திர வட்டாரங்களிடம் உதவி கேட்டு சிறீலங்கா அரசு சென்றது இதுவே முதல்முறை என கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply