யாழ்.மாநகர காவல் படை, தனது பணிகளை ஆரம்பித்துள்ளது

372 Views

யாழ் .மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனால் உருவாக்கப்பட்ட யாழ் மாநகர காவல் படை முதல் முறையாக இன்று காலை தமது பணிகளை ஆரம்பித்துள்ளது.

யாழ்ப்பாணம் மாநகரில் சுகாதார நடைமுறைகளை கண்காணித்தல், கழிவகற்றல் பொறிமுறையை கண்காணித்தல், மற்றும் மாநகரின் ஒழுங்கு உள்ளிட்டவற்றை கண்காணிப்பதற்காக குறித்த மாநகர பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டுள்ளது.

குறித்த மாநகர பாதுகாப்பு படை நாளை அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படவுள்ளது.

168019606 145575107494460 252178986530086578 n யாழ்.மாநகர காவல் படை, தனது பணிகளை ஆரம்பித்துள்ளது

இதையடுத்து இன்று காலை பரீட்சார்த்தமாக நல்லூர் சுற்றாடலில் வாகன ஒயில் ஊற்றப்பட்ட நிலையில் விபத்துக்களை தவிர்க்க முன்னாயத்த நடவடிக்கைகளை குறித்த மாநகர பாதுகாப்பு படை கண்காணித்தது.ஷ

யாழ் மாநகர சுகாதார பணிமனைகளில் பணியாற்றிய உத்தியோகத்தர்கள் 5 பேரை புதிய சீருடை ஒன்றை அறிமுகம் செய்து மாநகர காவல் படை என்ற பெயரில் யாழ் மாநகரசபை உருவாக்கியுள்ளது.

Leave a Reply