யாழ். பல்கலைக்கழகத்தில் அன்னை பூபதியின் நினைவேந்தல்

IMG 20230419 WA0073 யாழ். பல்கலைக்கழகத்தில் அன்னை பூபதியின் நினைவேந்தல்

இந்தியப் படைகளின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக 31 நாட்கள் உண்ணா நோன்பிருந்து தாயக விடுதலைக்காக உயிர் நீத்த அன்னை பூபதியின் நினைவேந்தல்கள் யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் இன்றைய தினம் (19) புதன்கிழமை அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன்போது அன்னை பூபதியின் உருவப்படத்திற்கு சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் அன்னை பூபதி தொடர்பான நினைவுரையும் இடம்பெற்றது.

விரிவுரையாளர்கள், ஊழியர் சங்க பிரதிநிதிகள் பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலிகளை செலுத்தினர்.