யாழ் நீதவான் நீதிமன்றத்தில் இன்று காலை ஆஜராகுமாறு செல்வம் அடைக்கலநாதனுக்கு கட்டளை

406 Views

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், டெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு ஆஜராகுமாறு கட்டளை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கட்டளை நேற்று திங்கட்கிழமை மாலை மன்னாரில் உள்ள அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குற்றவியல் நடவடி முறைச் சட்டக்கோவையின் பிரிவு 106(1) இன் கீழ் தங்களுக்கு எதிராக தடை உத்தரவு ஒன்றை பெற்றுக்கொள்வது தொடர்பில் கோப்பாய் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட மேற்படி இலக்க வழக்குத் தொடர்பாக தாங்கள் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றத்தின் கட்டளை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த கட்டளை அழைப்பானை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply