யாழ். தனங்கிளப்பில் அமைக்கப்படும் காற்றாலைக்கு கடும் எதிர்ப்பு; ஊழியர்களுடன் மக்கள் கைகலப்பு

யாழ்ப்பாணம் – தனங்கிளப்பு பகுதியில் அமைக்கப்படும் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்திற்கு பிரதேச மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தமையினால் இன்று அமைதியின்மை ஏற்பட்டது.

தனங்கிளப்பு பகுதியில் அமைக்கப்படும் மின் உற்பத்தி நிலைய வளாகத்தில் உள்ள தற்காலிகக் கொட்டிலை மக்கள் சேதப்படுத்தினர்.

காற்றாலை மின் உற்பத்தி நிலையத்திற்கு பிரதேச மக்கள் இதன்போது கடும் எதிர்ப்பை வௌிப்படுத்தினர்.

பிரதேச மக்களுக்கும் காற்றாலை மின் உற்பத்தி நிலைய நிர்மாணப்பணிகளில் ஈடுபட்ட ஊழியர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்ற சாவகச்சேரி பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.

சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.