தமிழர்களின் பிரதேசத்தை பௌத்தமயமாக்கும் நோக்கத்தோடு வலிகாமம் வடக்கு தையிட்டிப் பகுதியில் தனியார் காணியில் ஸ்ரீலங்கா ஆயுதப்படையின் உதவியோடு பௌத்த விகாரையொன்று அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவும் தனியாருக்கு சொந்தமான காணிகளை பாதுகாக்கும் நோக்காகவும் நாளை (3) மாலை 3 மணியளவில் குறித்த பகுதியில் கவனீர்ப்புப் போராட்டமொன்றை வலி வடக்கிலுள்ள பாதிக்கப்பட்ட தரப்பினர் ஒழுங்கமைத்துள்ளனர்.
அப் போராட்டத்திற்கு நாமும் எமது ஆதரவைத் தெரிவித்துள்ளதுடன் தமிழ் உணர்வாளர்கள் அனைவரையும் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைத்து நிற்கின்றோம்.