யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கோவிட்-19 நோயாளிகள் ஐவர் நேற்று இரவு 9 மணி வரையான 24 மணிநேரத்தில் உயிரிழந்தனர் என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மரணமடைந்தவர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நால்வரும் திருகோணமலை புல்மோட்டையை சேர்ந்த ஒருவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் அரியாலையை சேர்ந்த 89 வயது ஆண், புத்தூரை சேர்ந்த 48 வயது ஆண், பலாலியை சேர்ந்த 59 வயது ஆண், கோப்பாயை சேர்ந்த 51 வயது பெண் ஒருவருமாக நால்வர் உயிரிழந்தனர்.
திருகோணமலை புல்மோட்டையை சேர்ந்த 58 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 62ஆக உயர்வடைந்துள்ளது.