யாழில் வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்!

583 Views

காணாமல் போனவர்களின் உறவினர்கள் சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டபொன்றை மேற்கொண்டுள்ளனர்.

வடகிழக்கு காணாமல் போனவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப் போராட்டத்தின் போது மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு மகஜரொன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

இதன் போது காணாமல் போனோவர்கள் எங்கே, அரசே பதில் கூறு, சர்வதேச விசாரணை வேண்டும், அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும், காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

இப் போராட்டத்தில் வடக்கிலுள்ள காணாமல் போனவர்களின் உறவினர்கள், மதத்தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
hhhh யாழில் வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்!

Leave a Reply