212 Views
தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் 68வது பிறந்தநாள் நிகழ்வுகள் இன்றைய தினம் சனிக்கிழமை யாழில் பல இடங்களில் கொண்டாடப்பட்டது.
வல்வெட்டித்துறையில், விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் பூர்வீக வீட்டின் முன்பாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தால் கொண்டாடப்பட்டது.
இதன் போது பொதுமக்களுக்கு எள்ளுருண்டைகள் மற்றும் இனிப்புகள் வழங்கிவைக்கப்பட்ட அதேவேளை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும் பிறந்தநாள் கேக் வெட்டப்பட்டது.