யாழில் இடம்பெற்ற ‘மலையகம் 200’ நிகழ்வு 

download 3 யாழில் இடம்பெற்ற 'மலையகம் 200' நிகழ்வு 

மலையக மக்களது இலங்கை வருகையின் 200ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கிராமிய உழைப்பாளர் சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்வானது இன்று (27) யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில்  இடம்பெற்றது.

கிராமிய உழைப்பாளர் சங்க தலைவர் இன்பநாயகம் தலைமையேற்று நடத்திய இந்த நிகழ்வில் பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சிலர் பங்கேற்று மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக உரையாற்றினர்.

இதன்போது தொழிற்சங்க அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட மலையக மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டிருந்தனர்.