இன்று 7.00 மணிக்கு இந்தியப் பிரதமராக 2ஆவது தடவையாக பதவியேற்கும் நரேந்திர மோடி, பதவியேற்பு நிகழ்வின் முன்னதாக டெல்லியிலுள்ள பிரதமர் இல்லத்தில் தேநீர் விருந்தொன்றை ஒழுங்கு செய்திருந்தார். இதில் அமைச்சரவையில் கலந்து கொள்ளவிருக்கும் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.
ஆனால் இந்த தேநீர் விருந்தில் தமிழ்நாட்டில் அதிமுக சார்பில் ஒரு தொகுதியில் மட்டும் (தேனி) வெற்றி பெற்று டெல்லி சென்றுள்ள ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும், அத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்கவுள்ள ரவீந்திரநாத் குமாரும் மோடியின் இந்த தேநீர் விருந்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அதிமுக தரப்பில் இருந்து ஒரு பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படவுள்ள ரவீந்திரநாத் குமார் மத்திய அமைச்சராவார் என்று எதிர்பார்த்திருந்த அதிமுக கட்சியினர் கவலையடைந்துள்ளனர்.
இன்னும் அமைச்சரவை விபரங்கள் வெளியாகவில்லை. இன்னும் சற்று நேரத்தில் இந்த விபரங்கள் தெரிந்து விடும்.