மேலும் ஒரு ரஸ்யா அமைச்சருக்கு கொரோனா தொற்று

524 Views

தற்போது ரஸ்யாவில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரசின் தாக்கத்திற்கு மேலும் ஒரு அமைச்சர் உட்பட்டுள்ளதாக ரஸ்யா தகவல்கள் தெரிவித்துள்ளன.

ரஸ்யாவின் பிரதமர் இந்த நோயின் தொற்றுதலுக்கு உள்ளாகியுள்ள நிலையில் தற்போது கட்டுமானத்துறை அமைச்சர் விளமிடீர் ஜகுசேவ் என்பவரையும் நோய் பாதித்துள்ளது. அவரின் துணை அமைச்சரும் பாதிக்கப்பட்டுள்ளார்.

ரஸ்யா பிரதமருக்கு நோய் உள்ளது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அரச தலைவர் விளமிடீர் பூட்டீன் காணொளி கூட்டங்களையே மேற்கொண்டு வருகின்றார்.

ரஸ்யாவில் 1,222 பேர் மரணடடைந்துள்ளதுடன், 124,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply