மேற்குலக நாடுகளை பழிவாங்கியதாக சிறீலங்கா பெருமிதம்

இந்த வாரம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தற்காலிக உறுப்புஉரிமை நாடுகளை தெரிவுசெய்யும் வாக்கெடுப்பு இடம்பெற்றபோது கனடா, நோர்வே மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளை தாம் புறக்கணித்ததாக சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது.

நாம் மேற்கொண்ட இந்த நடவடிக்கையானது, அவர்கள் எதிர்காலத்தில் எம்முடன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கான பாடம் என சிறீலங்கா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கனடா மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் புலம்பெயர் தமிழ் சமூகத்திற்கு ஆதரவாக நடக்கின்றன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் கென்யா ஆகிய நாடுகளுக்கு ஆதரவாக சிறீலங்கா வாக்களித்திருந்தது.