மேற்குலகத்திற்கு கோத்தபாயா வழங்கப்போகும் அடுத்த தோல்வி

சிறீலங்காவின் புதிய அரச தலைவர் கோத்தபாயா ராஜபக்சா 19 ஆவது திருத்தச் சட்டத்தை அகற்றுவது தொடர்பில் அதிக அக்கறை காண்பித்துவருவதாகவும், அதற்காகவே தன்னை முன்னைய அரசதலைவர்களில் இருந்து வேறுபட்ட அரசியல்தலைவராகவும், தூய பௌத்த சிங்களவராகவும் காண்பிக்க முற்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய அரச தலைவராக பதவியேற்றபின்னர் மிகவும் வினைத்திறன் உள்ளஅரசாக தமது அரசைக் காண்பிப்பதில்கோத்தபாயா அதிக அக்கறை காண்பித்துவருகின்றார்.ஊழல்களைஇல்லாது செய்யப்போவதாக தெரிவித்துள்ள அவர் முன்னறிவித்தல்கள் இன்றிஅரச அலுவலகங்களுக்கும் பயணங்களை மேற்கொண்டு வருகின்றார்.

இந்த வாரம் நாடாளுமன்றத்திற்கு பயணம்மேற்கொண்ட அவர் பாதுகாப்பு வாகனங்கள்இன்றி தனது குண்டு துளைக்காதகாரில் பயணம் செய்திருந்தார்.இந்த முயற்சிகள் எல்லாம் பிரதமருக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் 19 ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாதுசெய்வதற்கான முயற்சிகள் ஆகும் என கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

2015 ஆம்ஆண்டு மகிந்த ராஜபக்சாவை அரசதலைவர் பதவியில் இருந்து அகற்றியபின்னர் மேற்குலகத்தின் உதவியுடன் ஐக்கிய தேசியக் கட்சிஅரசு கொண்டுவந்ததே 19 ஆவது திருத்தச்சட்டம்.

இந்த சட்டத்தில் உள்ள பலவீனங்களை பரீட்சித்துப்பார்ப்பதற்காக 2018 ஆம் ஆண்டு மகிந்தாராஜபக்சா மூலம் இந்தியா மேற்கொண்டமுயற்சி தோல்வியில் முடிந்திருந்தது.

இந்த நிலையில் தற்போது அதனைஅகற்றுவதற்கான முழு முயற்சிகளையும் புதியஅரசு மேற்கொண்டு வருகின்றது.கடந்த அரச தலைவர் தேர்தலில்கோத்தபாயா பெற்ற வாக்குகளின் எண்ணிக்கைஅளவு வாக்குகளை அவரின் கட்சி எதிர்வரும்ஏப்பிரலில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் பெறுமாக இருந்தால் அவர்கள் 120 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெறமுடியும்.

DSCF2855 மேற்குலகத்திற்கு கோத்தபாயா வழங்கப்போகும் அடுத்த தோல்வி225 நாடாளுமன்றஉறுப்பினர்களைக் கொண்ட சிறீலங்கா நாடாளுமன்றத்தில் 150 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுகள் இருந்தால் மட்டுமேமூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறமுடியும். எனவேதான் தற்போதைய அரசுமிகவும் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது.

19 ஆவது திருத்தச்சட்டத்தை நீக்குவதுஎன்பது மேற்குலகம் சார்ந்த கொள்கைகளைக் கொண்டசிங்களக் கட்சிகளுக்கு கோத்தபாயா அரசு வழங்கும் தோல்வியாகும்என கொழும்பைத் தளமாகக்கொண்ட அரசியல் அவதானி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கோத்தபாயாவைஎதிர்க்கும் அளவுக்கு பலமாக ஐக்கியதேசியக் கட்சி இல்லை எனவும், ரணில் விக்கிரமசிங்காவின் பதவி மோகத்தால் கட்சிமிகப்பெரும் உள்ளக பிரச்சனைகளில் சிக்கித்தவிப்பதாகவும். அந்த கட்சி தலையற்றகோழி போல ஓடுவதாகவும் அவர்மேலும் தெரிவித்துள்ளார்.

ஆனால் பெரும்பான்மையை பெறும் சிங்களக் கட்சிகளின்வரலாறுகள் நேர்த்தியாக இருந்தது இல்லை. மிகப்பெரும்பெரும்பான்மையை பெற்ற சிறீமாவோ பண்டாரநாயக்கா, அதன் பின்னர் சரிவையே சந்தித்தார்இ ஜே.ஆர் ஜெயவர்த்தானாவும்தேர்தல்களை நிறுத்தி திருத்தச்சட்டங்களை கொண்டுவருவதில் தீவிரமாகச் செயற்பட்டார், மகிந்த 2010 இல் பெற்ற பெரும்பான்மையும் அவருக்கு சரிவைத் தான் பின்னர் கொடுத்தது.

எனவே கோத்தபாயா மற்றுமொரு ஜே.ஆர் ஜெயவர்த்தனாவாகமாறுவாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.