முஸ்லிம் எய்ட் சிறிலங்கா நிறுவனத்தின் கல்வி அபிவிருத்தி

முஸ்லிம் எய்ட் சிறிலங்கா நிறுவனத்தின்  சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட பங்குபற்றுதலுடன் கூடிய  கல்வி அபிவிருத்தி – கட்டம் – III அங்குரார்பண நிகழ்வு கிண்ணியா  வலயக் கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில் 22.09.2023 ஆம் திகதியன்று நடை பெற்றது.

திருகோணமலை மாவட்டத்தில் நீண்டகாலமாக கல்வி அடைவில் பின்தங்கிய நிலையில் இருந்து வருகின்ற கிண்ணியா கல்வி வலயத்திலுள்ள  கல்வி மற்றும் கல்வி அடைவுகளைப் பாதிக்கின்ற பல்வேறு தேவைகள் உடைய 13 பாடசாலைகளில் மேற்படி தொணிப்பொருளில் மூன்றாம் கட்டமாக  முன்னெடுக்கப்படுகின்றது. முதலாவது கட்டத்தில் 5 பாடசாலைகளும் இரண்டாவது கட்டத்தில் 13 பாடசாலைகளும் இத் தொடர் நிகழ்ச்சித்திட்டத்தில் பயன்பெற்றன.

இலங்கை அரசாங்கத்தின் கல்விக் கொள்கைளை அடியொட்டி நிலைபேறான அபிவிருத்தி இலக்கு – 4 (Sustainable Development Goal – 4 ) இனை பிரதிபலிக்குமுகமாக  முஸ்லிம் எய்ட் சிறிலங்கா 13 பாடசாலைகளின் கல்வி மேம்பாட்டினை உறுதி செய்யும் வகையில், கட்டுமாணம் சார்ந்த மற்றும் கற்றல், கற்பித்தல் இ ஊக்கப்படுத்தல் சார்ந்த செயற்பாடுகள் அடையாளம் காணப்பட்டு, வள ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.

நவீன கல்விச்சூழலில் மாணவர்கள் உட்பட கல்விச் சமூகம் எதிர்கொள்கின்ற பல்வேறு சவால்களை எதிர்கொள்ளக்கூடியதாக இக்கருத்திட்டம் அமையும் எனஎதிர்பார்க்கப்படுகின்றது.

மேற்படி  நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி .அகிலா கனகசூரியம் , கிண்ணியா வலயக் கல்விப்பணிப்பாளர் ஏ.நசூகர்கான் ,முஸ்லிம் எய்ட் சிறிலங்கா நிறுவனத்தின் வதிவிடப்பணிப்பாளர் ஏ.சீ. பைஸர்கான், பிரதிக்கல்விப்பணிப்பாளர்களும்,  நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் முனீர் முஸ்தபா அவர்களும், திருமலை மாவட்டத்தில் கல்வி அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு வருகின்ற அரச  அரச சார்பற்ற நிறுவனங்களின்  உயரதிகாரிகள், ஊர்ப்பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

 

நிகழ்வின் முக்கிய அம்சமாக இம்மாத இறுதியில் ஓய்வு பெற்றுச்செல்லும்  கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் அகிலா கனகசூரியம் அவர்கள்  முஸ்லிம் எய்ட் சிறிலங்கா நிறுவனத்தினால் பாராட்டுச்சின்னம் வழங்கி  கௌரவிக்கப்பட்டார்.