கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் அவர்களின் தலைமையில் “திருகோணமலை மாவட்டத்தின் எழுத்தாளா்கள் மற்றும் கலைஞா்களின் வாண்மையை விருத்தி செய்யும் நோக்கில் , ” 2023.09.23 ஆம் திகதி சனிக்கிழமை காலை 08.30 மணி தொடக்கம் உப்புவௌியில் அமைந்துள்ள கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சித் திணைக்களத்தில் , “எழுகை” அறிவுப்பகிர்வு பயிற்சிப்பட்டறை பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளா் ச.நவநீதன் அவா்களின் தலைமையில் நடைபெறது.
கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள உயா்கல்வி நிறுவனங்களான தென்கிழக்குப் பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றும் திருகோணமலை வளாகம் ஆகியவற்றின் சிரேஸ்ட விரிவுரையாளா்களுடன், கலை இலக்கியத்துறைசாா் மூத்த,இளந்துறைசாா் ஆளுமைகள் வளவாளா்களாக கலந்துகொண்டிருந்தனர்.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்ட மூதூர்,கிண்ணியா,குச்சவெளி,பட்டினமும் சூழலும், தம்பலகாமம் பிரதேசங்களின் கலை,இலக்கிய மன்ற உறுப்பினா்கள் மற்றும் துறைசாா் கலைஞா்கள் பங்குபற்றியிருந்தனர்.