முழுமையாக நாட்டை முடக்கினாலே கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும்- அமைச்சர் சுதர்சினி

இலங்கையில்  கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 154,786 ஆக அதிகரித்துள்ளது. அதே வேளை இத் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,089 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்று மட்டும் 38 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இந்த சூழலில் இலங்கையில் கொரோனாத் தொற்று அச்சுறுத்தல் நிலை தீவிரம் பெற்றுள்ளதாக சுகாதாரத் துறை ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் ஏழு பேரில் ஒருவருக்கு என்ற விகிதத்தில் தொற்று உறுதி செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முழுமையாக இரண்டு வாரங்களாவது நாட்டை முடக்கினால் மாத்திரமே கொரோனா தொற்று அதிகரிப்பினை தடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே  இவ்வாறு கூறியுள்ளார்.

Leave a Reply