முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கு முக்கியத்துவம் கொடுத்த சிறீலங்கா தமிழ் ஊடகங்கள்

441 Views

கடந்த வாரம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நிகழ்வை சிறீலங்கா அரசு தடுக்க முனைந்தபோதும், தமிழ் ஊடகங்கள் அதற்கு மிக முக்கியத்துவம் வழங்கியதாக கொழும்பு சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.

திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் சிறீலங்காவில் இருந்து வெளிவந்த தமிழ் ஊடகங்களில் 75 செய்திகளில் 23 செய்திகள் முள்ளிவாய்க்கால் நிகழ்வு தொடர்பானவை. பல பக்கங்கள் புகைப்படங்கள் மற்றும் அஞ்சலி உரைகள், முள்ளிவாய்க்கால் பிரகடனம் ஆகியவற்றை தாங்கியதாக வெளிவந்துள்ளன. சிறீலங்கா அரசு ஒரு போர்க்குற்றவாளி என்ற வாசத்துடன் பிரகடனம் பிரசுரம் செய்யப்பட்டுள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply