முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 9 | வானில்வரும் மண்ணில்வரும் வண்கடலைக் கலக்கிவரும்….

426 Views

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 9
தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் பாடல் வரிகள்.

வானில்வரும் மண்ணில்வரும் வண்கடலைக் கலக்கிவரும்
வல்லவன்எம் மன்னன்படை பாரடா!
கானில்வரும் கடுகிவரும் கரும்புலியாய்ப் பெருகிவரும்
காடையனே நீயழிந்தாய் போரடா!
ஊனில்வரும் உயிரில்வரும் ஒண்டமிழ்த்தாய் தேரும்வரும்
உத்தமர்நாம் சொல்லுகிறோம் கேளடா!
தேனில்வரும் சேதிவரும் தீந்தமிழ்மா ஈழம்வரும்
தேம்பியவர் குறித்துவைத்தோம் நாளாடா!

Leave a Reply