462 Views
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம் சற்று முன்னர் மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான சதாசிவம் கனகரத்தினம் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.
இக் கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவுகின்ற பல்வேறு பிரச்சினைகள் குறைபாடுகள் மற்றும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் தொடர்பான கருத்துக்கள் பகிரப்படவுள்ளதுடன் அவை தொடர்பிலான சில தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவுள்ளன.
குறித்த கலந்துரையாடலில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவப்பிரகாசம் சிவமோகன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, காதர் மஸ்தான், சிவசக்தி ஆனந்தன், முல்லைத்தீவு மாவட்ட பிரதேச சபைகளின் தலைவர்கள் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், அரச திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.