முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் தொடர்பில் சுயாதீன விசாரணை தேவை – சஜித்

முல்லைத்தீவு நீதிபதியின் பதவி விலகல் மிகவும் பாரதூரமான விடயமாகும் என்றும், இது நீதித்துறை சுதந்திரம் சார் பிரச்சினை என்றும், அவருக்கு கொலை மிரட்டல்களும், அழுத்தங்களும் வந்ததாக கூறப்பட்டுள்ளதாகவும், இது ஒரு பாரதூரமான அறிவிப்பு என்பதால், சுதந்திரமான விசாரணை நடத்தப்பட்டு, இதன் பின்னனியில் உள்ள உண்மை குறித்து இந்த சபைக்கு அறிவிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(03) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.