முல்லைத்தீவு சுதந்திரபுரம் படுகொலையின் 23 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்

சுதந்திரபுரத்தில் 1998.06.10 அன்று அரசபடையினரால் நடத்தப்பட்ட படுகொலையில் உயிரிழந்த மக்களின் 23 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரிவிற்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் கடந்த 1998 ஆம் ஆண்டு எறிகணைத் தாக்குதல் மற்றும் விமானத் தாக்குதலில் உயிரிழந்த 33 பொது மக்களின் 23 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.  கடந்த ஆண்டும் கொரோனா தொற்றுக் காரணத்தினால்  நினைவு நிகழ்வினை மேற்கொள்ள பொலீசார் தடை விதித்திருந்தனர். ஆனால் கடந்த வருடம் தடைகளையும் மீறி நினைவு நிகழ்வு நடைபெற்றது குறிப்பித்தக்கது.

இந்த ஆண்டும். அதே நிலைமையே தொடர்கின்றது.  மக்கள் ஒன்றுகூட முடியாத நிலையில் தங்கள் உறவுகளை நினைவுகூர முடியாத நிலையில் காணப்படுகின்றனர்.

Leave a Reply