முல்லைத்தீவுப் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு

438 Views

முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு விமானப்படை புலனாய்வாளர்களின் தகவலின் அடிப்படையில் முல்லைத்தீவு சாலை காட்டுப்பகுதியில் இருந்து ஒரு தொகுதி வெடிபொருட்கள் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

18.04.21 இன்று மாலை குறித்த பகுதியில் விமானப்படையினரால் அடையாளம் காணப்பட்ட வெடிபொருட்கள் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

இந்த மீட்பின் போது, 60 மில்லிமீற்றர் மோட்டார் குண்டுகள் – 08, 80 மில்லிமீற்றர் மோட்டார் குண்டுகள் – 03, கைக்குண்டு – 01, விடுதலைப்புலிகளின் தயாரிப்பு குண்டு – 04, ஆர்.பி.ஜி குண்டு – 05  என்பன மீட்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலீசார் தெரிவித்துள்ளார்கள்.
இவற்றை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

Leave a Reply