முன்னாள் போராளி ஒருவர் உயிரிழப்பு

485 Views

வாகன விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்த முன்னாள் போராளியின் இறுதிக் கிரியைகள் நடைபெற்றுள்ளது.

இன்று புதிய கொலனி மாங்குளத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இறுதிக் கிரியைகள் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாங்குளம், புதிய கொலனியை சேர்ந்த விஸ்வலிங்கம் பிரபா (வயது 30) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

குறித்தநபர் கடந்த 27.11.19 அன்று முறிகண்டிப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்து ஒன்றில் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply