முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் கஃபே அமைப்பின் பிரதிநிதிகளுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்றைய(09) தினம் கொழும்பு ராஜகிரியவில் அமைந்துள்ள கஃபே தலைமை காரியாலயத்தில் இடம் பெற்றது.
இந்த சந்திப்பின் போது, தொடர்ச்சியாக தேர்தல்கள் பிற்போடப்படுவதன் பாதகங்கள், அரசியலில் பெண்களின் வகிபாகங்கள், பெண் அரசியல்வாதிகள் எதிர்கொள்ளக்கூடிய சவால்கள் மற்றும் சவால்களை எதிர்கொண்டு அரசியலில் பெண்கள் நிலைத்திருக்க செய்வதன் அவசியம் போன்றவை, தொடர்பான விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.
கலந்துரையாடலின் போது கஃபே தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் சார்பாக அதன் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மகீன் அதேபோன்று நிர்வாக பணிப்பாளர் சுரங்கி ஆரியவங்ஷ மற்றும் சட்டத்துறை பணிப்பாளர் ஹரேந்திர பானகல ஆகியோர் கலந்து கொண்டனர்.