இந்திய வெளிவிவகார அமைச்சரை புறக்கணித்த இலங்கை

இன்று (11) இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கரை வரவேற்பதற்காக இலங்கை அரசு தேசியப் பட்டியல் மூலம் தெரிவாகிய உயர்கல்வி அமைச்சரை அனுப்பியது இரு நாடுகளுக்கும் இடையிலான முறுகல் நிலை அதிகமாகி வருவதை காண்பிப்பதாக கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்து சமுத்திர பிராந்திய நாடுகளின் வளை கூட்டமைப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்திய அமைச்சர் இலங்கை வந்துள்ளார். அவரை இலங்கை உயர்கல்வி அமைச்சர் சுரேன் இராகவன் மற்றும் இலங்கைக்கான இந்திய தூதுவது கோபால் பாக்லே ஆகியோர் வரவேற்றிருந்தனர்.

இலங்கைக்கு வரவுள்ள சீனாவின் ஆய்வுக்கப்பலை நிறுத்துவதற்கு இந்தியா கடும் முயற்சிகளை மேற்கொண்டபோதும் அது கைகூடவில்லை. எனினும் இந்தியாவின் வேண்டுகோளுக்கு இணங்க அதன் வரவை இந்து சமுத்திர பிர-hந்திய நாடுகளின் வளை கூட்டமைப்பு மாநாடு முடிந்த பின்னர் இலங்கை அரசு பிற்போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கப்பலின் பயணம் ஒத்திவைக்கப்பட்ட பின்னரே ஜெயசங்கர் இலங்கை வந்துள்ளார்.