நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் எம்.பிக்களின் பாதுகாப்பை நீக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அவர்களின் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படவுள்ளது. அவர்களிற்கு பாதுகாப்பை தொடர வேண்டுமா, அல்லது அதிக பாதுகாப்பை வழங்க வேண்டுமா என்பதை பாதுகாப்புத் துறையினர் மதிப்பிட்டு அறிக்கை சமர்ப்பிப்பதில் கவனம் செலுத்திவருகிறார்கள்.
முன்னாள் எம்.பிக்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறித்து, பாதுகாப்புச் செயலாளர் விவரங்களைப் பெற்றுள்ளார். மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டதும், பாதுகாப் புச் செயலாளருக்கு அறிவிக்கப்பட வுள்ளது.
கடந்த பொதுத் தேர்தலில் 71 முன்னாள் எம்.பிக்கள் தோல்வியடைந்தனர். கம்பஹா மாவட்டத்திலிருந்து அதிக எண்ணிக்கையிலான- 7 எம்.பி.க்கள் தோல்வியடைந்தனர். தோற்கடிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலும் 7 எம்.பிக்கள் தோல்வியடைந்தனர்.