மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் நீரில் மூழ்கி பரிதாப மரணம்!

383 Views

வவுனியா மாவட்டம் மயிலங்குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற நான்கு பிள்ளைகளின் தந்தையார் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

ஆசிகுளம் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இன்று மீன்பிடிக்கச் சென்ற அவர் நீரில் மூழ்கியபோது அவதானித்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு நோயாளர் காவு வண்டி மூலம் வைத்தியசாலைக்கு அனுப்பியிருக்கின்றனர்.

இருப்பினும் வைத்தியசாலையில் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

Leave a Reply