மீனவர்கள் மீது வழக்குகள் பதிவு – இராமேசுவரத்தில் முற்றுகைப் போராட்டம்

432 Views

சிறீலங்கா கடற்படையின் தாக்குதலில் உயிரிழந்த மீனவர்களுக்கு ஆதர வாக போராடிய மீனவர்கள் மீது போடப்பட்ட வழக்கை  மீளப் பெறக் கோரி இராமேசுவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

ஜனவரி 18 அன்று தங்கச்சிமடம் ஆரோக்கியஜேசு என்பவரது விசைப் படகில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மெசியா, மண்டபம் அகதிகள் முகாமைச் சேர்ந்த சாம்சன் டார்வின், வட்டான்வலசை சேர்ந்த நாகராஜ், தாத்தனேந்தலைச் சேர்ந்த செந்தில்குமார் ஆகிய 4 மீனவர்கள், கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த  சிறீலங்கா கடற்படையினரின் ரோந்துக் கப்பல் மோதியதில் குறித்த மீனவர்களின் படகு மூழ்கி 4 மீனவர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply