மீண்டும் யாழ்ப்பாணத்திற்கே காணி ஆவணங்கள் கொண்டு வரப்பட்டன -யாழ்.மாவட்ட அரச அதிபர் தகவல்

498 Views

யாழ்ப்பாணத்திலிருந்து அனுராதபுரம் கொண்டு செல்லப்பட்ட காணி
சீர்திருத்த ஆணைக்குழுவின் ஆவணங்கள் நேற்று மாலை யாழ். மாவட்ட செய
லகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் க.மகேசன்
தெரிவித்தார்.

இதேவேளை, காணி ஆவணங்கள் நேற்று மாலை 5.30 மணிக்கு யாழ்.
மாவட்ட செயலகத்தை வந்தடைந்ததாக காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் யாழ்.
மாவட்ட பொறுப்பதிகாரி விமலனும் தெரிவித்தார்.

கடந்த 08ஆம் திகதி இரவு காணி ஆவணங்கள் யாழ்ப்பாணத்திலி
ருந்து இரகசியமாக அனுராதபுரத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன.மின்சாரம் தடைப்பட்டிருந்த நேரம் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை
பெரும் சர்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந் நிலையில் நேற்று முன் தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கலந்
துரையாடலின் போது அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே, குறித்த
ஆவணங்களை யாழ்ப்பாணத்துக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்
டுள்ளது என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே குறித்த ஆவணங்கள் யாழ்ப்பாணம் கொண்டு வரப்பட்டுள்ளதாக
தெரியவருகிறது.

Leave a Reply