மியான்மரில் மேலும் 38 போராட்டக்காரர்கள் சுட்டுக்கொலை

594 Views

மியான்மரில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதற்கு பிந்தைய மோசமான நாட்களில் ஒன்றாக   38 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

மியான்மரில் மிகப்பெரிய நகரமான யங்கூனில் உள்ள ஒரு பகுதியில், நேற்று ஞாயிறன்று போராட்டம் நடத்தியவர்கள் மீது  இராணுவத்தினர்  துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

அத்தோடு சீனாவைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களும்  தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

இதில் ஏறகனவே இராணுவத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடு பட்ட 70 வரையிலான பொது மக்களை இராணுவம் சுட்டுக்கொன்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பெப்ரவரி முதலாம் திகதி இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் மியான்மரில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply