மியான்மரில்  பெருமளவிலானோர் இராணுவத் தாக்குதலில் பலி – ஐ.நா தகவல்

மியான்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக நடந்துவரும் போராட்டங்களில் இதுவரை 50-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருப்பதாக ஐ.நா தெரிவிக்கிறது. ஆனால், இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என வேறு சில செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் 25 வயதிற்கும் உட்பட்டோர் என்று தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் 2000க்கும் மேற்பட்டோர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மியான்மரில் பெப்ரவரி 1-ம் திகதி இராணுவத்தினரால் ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தப்பட்டு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதோடு அந்நாட்டுத் தலைவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இராணுவ ஆட்சிக்கு எதிராகவும்  ஆங் சாங் சூகி உட்பட முக்கிய அரசியல்வாதிகள், அதிகாரிகளை விடுதலை செய்ய வலியுறுத்தியும் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகி்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.