மியான்மரில் குழந்தைகள் உட்பட 459 பேர் சுட்டுக் கொலை -2559 பேர் சிறையில் அடைப்பு

402 Views

மியான்மரில் குழந்தைகள் உட்பட 459 பேர் அந்நாட்டு இராணுவத்தினரினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக ஸ்டடீஸ்டா எனும் அமைப்பு  வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2559 பேர் சிறைவைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் கடந்த மார்ச் 27 அன்று மியான்மர் இராணுவ தினத்தன்று மட்டும் குழந்தைகள் உட்பட 90 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவத்தின் இந்த நடவடிக்கை குறித்து கருத்து தெரிவிதத மியிஞ்ஞான் பகுதி மக்கள், இராணுவம் குருவிகளைச் சுடுவது பொல ங்களைச் சுட்டு தள்ளுகிறது. ஆனாலும் எங்கள் போராட்டத்தைக் கைவிடமாட்டோம்.” என்றனர்.

2020ஆம் ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டி, கடந்த பெப்ரவரி மாதம் முதல் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகி மற்றும் மியான்மரின் அதிபர் வின் மின்ட் ஆகியோர் இராணுவத்தினரால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, இராணுவம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது.

மேலும் அடுத்த ஓராண்டுக்கு இராணுவம் அவசர நிலையை அறிவித்திருக்கிறது.

இதைத் தொடர்ந்து இராணுவ ஆட்சிக்கு எதிராகவும் ஆங் சான் சூகிக்கு ஆதரவாகவும் சாலைகளில் இறங்கி பல்லாயிரக்கணக்கான மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு போராடும் மக்களைக் குறி வைத்தே அந்நாட்டு இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா முதற் கொண்டு பல நாடுகள் இராணுவத்தின் இந்தக் கொலைகளைக் கண்டித்தும் மியான்மார் இராணுவம் எந்த எச்சரிக்கையையும் கண்டுகொள்ளாது தொடர்ந்து மக்கள் மீது  தாக்குதலை தொடர்ந்த வண்ணம் உள்ளது.

Leave a Reply