மியன்மாரினால் இலங்கைக்கு 1000 மெட்ரிக் தொன் அரிசி அன்பளிப்பு

98 Views

மியன்மார் அரசாங்கத்தினால் இலங்கைக்கு 1000 மெட்ரிக் தொன் அரிசி அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

இலங்கை – மியன்மார் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 73 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நேற்று (திங்கட்கிழமை) இந்த அன்பளிப்பு வழங்கப்பட்டது.

கொழும்பு துறைமுகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கைக்கான மியன்மார் தூதுவர் யு ஹான் து, வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனிடம் அரிசியை கையளித்தார்.

Leave a Reply