மிகக் குறைந்த வரிச் சலுகையில் இலங்கைக்கு கடனுதவி – ஐரோப்பிய ஒன்றியம் உறுதி

ஐரோப்பிய முதலீட்டு வங்கி ஊடாக மிகக் குறைந்த வரி அடிப்படையில் இலங்கைக்கு கடன் உதவியை வழங்குவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடனான சந்திப்பில் உறுதியளித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான துாதுவர், ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்பு பிரிவின் பிரதானி உள்ளிட்டோர் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடனான சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இதில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த உதவியை வழங்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதற்கு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்தனர்.

மேலும் ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் ஊடாக இலங்கைக்கு மிகக் குறைந்த வட்டி அடிப்படையிலான கடனுதவியை வழங்குவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் எதிர்க் கட்சி தலைவரிடம் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கடந்த சில நாள்களாக வெளிநாடுகளின் இலங்கைக்கான தூதுவர்களைச் சந்தித்து உதவிகளைக் கோரி வருகின்றார் என்பது  குறிப்பிடத்தக்கது.