மாவீரர் நாள் நினைவு கூருவது குறித்து கலந்துரையாடல்

419 Views

தமிழ்த்தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் – மாவீரர் துயிலும் இல்லங்கள் சார்ந்த நினைவேந்தல் ஏற்பாட்டு குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு   வடமாகாணசபை அவைத்தலைவர் சிவிகே சிவஞானம் அவர்களின் அலுவலகத்தில் நடைபெற்றது.

PHOTO 2020 11 21 16 44 46 மாவீரர் நாள் நினைவு கூருவது குறித்து கலந்துரையாடல்

இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் சார்பில் சிவிகே சிவஞானம், உதயன் பத்திரிகை குழும தலைவர் ஈஸ்வரபாதம் சரவணபவன், நாடாளுமன்ற உறுப்பினர் சி வி விக்கினேஸ்வரனின் பிரதிநிதியாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ரெலோ சார்பாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் மற்றும் தீவகம் சாட்டி மாவீரர் துயிலுமில்ல நினைவேந்தல் ஏற்பாட்டு குழு சார்பாக மாணிக்கவாசகர் இளம்பிறையன், கருணாகரன் குணாளன், தனூபன் வடமராட்சி மாவீரர் துயிலுமில்லம் சார்பாக வேந்தன் ( ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் ) உட்பட பலரும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர் .

PHOTO 2020 11 21 16 44 46 1 மாவீரர் நாள் நினைவு கூருவது குறித்து கலந்துரையாடல்

இந்த கூட்டத்தில், தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற நீதிமன்ற செயற்பாடுகள் தொடர்பாகவும் எதிர்வரும் 24 ம் திகதியன்று தாயக மக்களை தெளிவுபடுத்துவது தொடர்பாக வெளியிடப்படவுள்ள அறிக்கைகள் தொடர்பாகவும், ஊடகங்கள் ஊடாக மக்களின் அச்சத்தினை போக்கி தெளிவுபடுத்துவது தொடர்பாகவும், குறிப்பாக நவம்பர் 27 ம் திகதி அனைத்து இல்லங்களின் வாசல்களிலும் தீப ஒளியை ஏற்றுமாறு தாயக மக்களிடம் வேண்டுகோள் விடுப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply